யாழ் YouTuber கிருஸ்ணா தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..!!!
யாழ்ப்பாண YouTuber கிருஸ்ணாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
YouTuber கிருஸ்ணா மீதான வழக்கு இன்று (2) எடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களிடம் நிதியுதவி பெற்று பிறருக்கு உதவுவதாக காட்டிக்கொள்ளும் YouTuber கிருஸ்ணா அது தொடர்பிலான காணொளிகளையும் வெளியிடுவார்.
அந்தவகையில் யுவதி ஒருவரிடம் அநாகரிகமாக வார்த்தை பிரயோகித்தமை தொடர்பில் சர்ச்சையானதை அடுத்து YouTuber கிருஸ்ணா , கைதாகி விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.