மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டால், கைக்கு வந்த நல்லது, கை நழுவி செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பெரியவர்களிடம் மரியாதையாக பேசுங்கள். வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை இன்று சாப்பிட வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம், பதட்டம் இருக்கும். ஒரு வேலையில் முழுசாக உங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். யாரிடமும் சண்டை போட வேண்டாம். வாழ்க்கை துணையோடு பொய் சொல்ல வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன கவலைகள் இருக்கும். நடந்ததை எண்ணி, நடக்கப் போவதை எண்ணி, இன்று தலைக்கு மேல் இருக்கும் வேலையெல்லாம் விட்டுவிட்டு கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள். இதனால் இன்றைய நாள் வீணாகபோவது உறுதி. எல்லா மன கசப்பையும் ஓரமாக வைத்துவிட்டு, இன்றைய நாள் எப்படி ஜெயிப்பது என்று மட்டும் சிந்தியுங்கள் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நேரத்தை வீணடிக்க கூடாது. டைம் டேபிள் போட்டு வேலை செய்ய வேண்டும். இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடித்து விட்டால் நீங்கள் தான் இந்த உலகத்தின் அதிர்ஷ்டசாலி. நேரத்தை தேவையில்லாமல், தேவையில்லாத விஷயங்களுக்கு செலவழித்தால், நீங்கள் தான் துர்பாக்கியசாலி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. உடல் அசதி இருக்கும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தை கவனிக்க முடியாது. இதனால் அடுத்தவர்களுடைய உதவியை நாடுவீர்கள். இதுபோல இன்னல்கள் இன்று உங்களுக்கு கொஞ்சம் இருக்கும். தேவையற்ற அவஸ்தைகளை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் வேறு வழியில்லை இதையெல்லாம் நீங்கள் சமாளித்துக் கொள்ளுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று சோம்பேறித்தனத்தோடு வலம் வருவீர்கள். எந்த வேலையிலும் ஈடுபட மாட்டார்கள். இதனால் வேலையில் வியாபாரத்தில் சின்ன பின்னடைவு உண்டாகலாம். அடுத்தவர்களுடைய தேவையில்லாத கேள்விகளுக்கு கைகட்டி பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை, தலைகுனிவு இவைகள் எல்லாம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கவனத்தோடு நடந்து கொள்ளவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியோடு இருக்கும். சுப காரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். உங்களுடைய வீட்டிற்கும் நல்லது நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என்று எல்லா நல்லதும் காத்துக் கொண்டிருக்கு. நல்ல செய்தி இருக்கிறது. வேலை வியாபாரம் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுடைய முயற்சிகள் நிச்சயம் வெற்றி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். உங்களுடைய கோபத்தை நீங்களே குறைத்துக் கொள்வீர்கள். எதிரிகளிடம் கூட அன்பு காட்டுவீர்கள். பதட்டம் இல்லாமல் ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். யாராவது வந்து உங்களோடு வம்பு பேசினாலும் அதை திறமையாக சமாளித்து அனுப்பி விடுவீர்கள். இன்று ஒரு பக்குவம் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். அது உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். ஆனால் அந்த வேலை கடைசி நிமிஷம் வரை உங்களுக்கு ஆட்டம் காட்டும். பெரிய தலைவலிக்கு பிறகு தான் ஒரு வெற்றியை கடவுள் உங்களுக்கு இன்று கொடுக்கப் போகின்றான். ஆகவே மனதை உறுதியாக வைத்து செயல்படவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாள். உற்சாகம் நிறைந்த நாள். நல்ல பெயர் வந்து சேரும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு நிறைய லாபத்தை கொடுக்கும். நல்லதே நடக்கும். இறைவனின் ஆசிர்வாதம் உங்களுக்கு இன்று இருக்கிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடை தடங்கல்கள் வரும். உங்களுடைய வேலையை கெடுப்பதற்கு நாலு பேர் வேலை செய்வார்கள். எதிரிகளுடைய தொல்லை, சூழ்ச்சியை எல்லாம் சமாளிக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். கவலைப்படாதீங்க, உஷாராக இருங்க, யாரையும் நம்பாதீங்க, நிச்சயம் இறைவன் உங்களுக்கான நல்ல வழியை காட்டுவான்.