யாழில் கணிதத் துறையில் சாதனை படைத்த ஹாட்லி கல்லூரி..!!!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியாகி இருந்தன.
அந்தவகையில் கணிதத்துறையில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
அந்த பாடசாலையின் மாணவனான கந்ததாசன் தசரத் என்பவரே இவ்வாறு கணிதத் துறையில் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே 16 ஆம் திகதி வரை குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.