Monday, 21 April 2025

புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்..!!!

SHARE




புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அத்துடன் கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் அவரது மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE