யாழில் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!
மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாக குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துன்னாலை - குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன்(வயது-34) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பருத்தித்துறை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்றுக் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டள்ளது.
கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.