தவறான முடிவெடுத்து 30 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த அந்தப் பெண், அண்மைக்காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார், இதன் காரணமாகவே தவறான முடிவெடுத்து உயிரிழந்தார் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.