யாழ். இந்துவின் மாணவர்கள் உயிரியல் பிரிவில் சாதனை..!!!
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் (இருவரும் இரட்டையர்கள்) மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும் பெற்றுள்ளனர்.
யமுனாநந்தா பிரணவன் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும், யமுனாநந்தா சரவணன் மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும், யாழ். போதனா மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் யமுனாநந்தாவின் புதல்வர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.