யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் உயிரிழப்பு..!!!
வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளமொன்றில் நீராடிய இளைஞர், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் - தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 23வயதுடைய சிவராசு சிலுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில் பகுதியில் உள்ள திம்புருவில் குளத்தில் நீராடியுள்ளனர்.
அப்போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், வரணி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் உயிர்மாய்த்துள்ளார். வரணி பகுதியை சேர்ந்த யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.