யாழில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு..!!!
7 நாட்கள் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று மரணமடைந்துள்ளார்.
இதில் தெல்லிப்பழையைச் சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது-23) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.
புதுவருடத்தன்று காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை (19) மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (21) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு உடற் கூற்றுப் பரிசோதனைக்கு அறிவுறுத்தினார் உடற்கூற்றுப் பரிசோதனையில் மூளைக் காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்த தாக அறிக்கையிடப்பட்டுள்ளது.