
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் கந்தளாய், அக்போபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி, மாவனெல்ல, உயன்வத்த பகுதியில் இருந்து 26 பேர் கொண்ட உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக அதிசொகுசு தனியார் பஸ் ஒன்றும் இராணுவத்துக்குச் சொந்தமான பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாவனெல்லை பகுதியில் இருந்து திருகோணமலைக்கு பஸ்ஸில் சுற்றுலா சென்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.