யாழ்ப்பாணத்தில் வயிற்றோட்டம் காரணமாக பிறந்து 43 நாட்களேயானா குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இளவாலை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, ஆண் , பெண் என இரட்டை குழந்தைகளை பிரசவித்திருந்தார்.
அதில் ஆண் குழந்தை தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் (கண்ணாடி பெட்டிக்குள்) கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி பெண் குழந்தையையும் தாயையும் வீடு செல்ல வைத்தியர்கள் அனுமதித்தனர்
அதனை தொடர்ந்து தாயார் வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு பாலூட்டவும் , வைத்தியசாலையில் உள்ள ஆண் குழந்தையை பார்வையிடவும் என வீட்டிற்கும் வைத்தியசாலைக்கு இடையில் மாறி மாறி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த சில நிமிடங்களில் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது
அதனை தொடர்ந்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
பிறந்த குழந்தைகள் இரண்டும் வைத்தியசாலையில் நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்தமையால் குழந்தைகளுக்கு பெயர் கூட சூட்ட வில்லை என குழந்தையின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.