யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவரின் பணம் திருட்டு - பணியாளரிடம் விசாரணை..!!!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரின் உடமையில் இருந்த ஆயிரம் 'பிராங்க்' திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்புக் கமராக்களின் பதிவுகளை ஆராய்ந்த பொலிஸார், மருத்துவமனையின் பணியாளர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை வளையத்துக்குள் எடுத்துள்ளனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.