விபத்தில் தாயும் தந்தையும் பலி ; படுகாயமடைந்த பச்சிளம் குழந்தை..!!!
தம்புள்ளை - குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தெஹிஅத்தகண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய கணவனும் 28 வயதுடைய மனைவியும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியரின் மகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவெலவிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்கும்போது நாய் ஒன்றுடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் கலேவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியர் உயிரிழந்ததாகவும், தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.