யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் விபரீத முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் கிழக்கைச் சேர்ந்த யோகேஸ்வரன் சுதர்சினி (வயது-29) என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.
இவர் கடந்த மாதம் 23ஆம் திகதி விவசாயத்துக்குப் பயன்படுத்தக்கூடிய கிருமிநாசினியை அருந்தியுள்ளார். உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 24 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.
யாழ்.திடீர் மரண விசாரணை அதி காரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.