நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்..!!!
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வடகிழக்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
நாளை 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் சனிக்கிழமை மாலை 4 மணிவரை எண்ணெய் காப்புச் சாத்தல் இடம்பெறவுள்ளது.
மறுநாள் திங்கட்கிழமை பூசநட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய காலை 9.20 மணிமுதல் 10.20 மணிவரையுள்ள இடபலக்ன சுபமுகூர்த்த வேளையில் மனோன்மணி அம்பாளுக்கும் விநாயகர் முதலான பரிவாரமூர்த்திகளுக்கும் நவசக்தி இராஜகோபுரத்திற்கும் மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.