Wednesday, 23 April 2025

யாழில். அறநெறி பாடசாலை மாணவர்களை ஆன்மீக சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுங்கள்..!!!

SHARE

அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அறநெறிப் பாடசாலைகளை பாதிக்காத வகையில் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியாா் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும், அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

மேலும், பிரதேச செயலக ரீதியாக அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலை ஏற்பாடு செய்து அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான தகவல்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டதுடன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைகளில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் உ.தா்சினி மற்றும் மாவட்ட, பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
SHARE