Sunday, 27 April 2025

பணிப் பகிஷ்கரிப்புக்கு தயாராகும் யாழ். மாநகர சபை..!!!

SHARE

யாழ். மாநகர சபையின் சுகாதார பிரிவினர் நாளை திங்கட்கிழமை (20) பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை வைத்திய அதிகாரிகள், யாழ்ப்பாணம் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், யாழ். மாநகர சபை சுகாதார மாதுகள் சங்கம் ஆகியன இணைந்து, மாநகர சபை ஆணையாளர் மற்றும் கணக்காளரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளனர்.

இதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார சேவைகள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்கள் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு முற்று முழுதான பொறுப்பை மாநகர சபை ஆணையாளரும் கணக்காளர் பகுதியினரும் பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE