Saturday, 26 April 2025

யாழ் நோக்கிப் பயணித்த லொறி விபத்து ; இளைஞன் பலி..!!!

SHARE


கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் போவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் - மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.

இது தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE