அப்பா விவசாயம் செய்தே என்னைப் படிக்க வைத்தார்..!!!
"எனது அப்பா விவசாயம் செய்தே என்னைப் படிக்க வைத்தார், நான் எனது இலக்கை அடைவேன்" என வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் வணிகத் துறையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் தெரிவித்துள்ளார்.
வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 3A சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் குறித்த மாணவி முதலிடம் பெற்றுள்ளார். குறித்த மாணவி மேலும் தெரிவிக்கையில்,
நான் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெறுவதற்குத் துணையாகவிருந்த பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி. அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்களுக்கும் நன்றி. நான் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்தரம் வரை இங்கு தான் கல்வி கற்றேன். எனக்கு அந்த வகையில் உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.
எனது அப்பா விவசாயம் செய்து தான் என்னைப் படிக்க வைத்தார். அவருக்கும், அம்மாவுக்கும் நன்றிகள். நான் பல்கலைக்கழகம் சென்று கணக்காளராக வேண்டும் என்பதே எனது அவா. இந்த இலக்கை நிச்சயம் அடைவேன் என்றார்.