கிளிநொச்சியில் தந்தையாரின் டிப்பர் வாகனத்திற்குள் அகப்பட்டு குழந்தை உயிரிழப்பு..!!!
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று தந்தையாரின் டிப்பர் வாகனத்திற்குள் தவறுதலாக அகப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்தார்.
வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிப்பர் வண்டியை எடுக்க முற்பட்ட சமயம் குழந்தை பின்னால் நின்றதை கவனிக்காதமையால் இந்த அனர்த்தம் நிகழ்ந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் உடலம் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.