உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு தேர்தல் ஆணைக்குழு விளக்கம்..!!!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற வாக்குச் சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும், சின்னங்களும், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாயின் சுயேச்சைக் குழு வொன்றின் சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கம் மற்றும் சின்னம் மாத்திரமே அச்சிடப்பட்டிருக்கும். வேட்பாளரின் அல்லது வட்டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இதில் குறிப்பிடப்படமாட்டாது.
வாக்களிப்பதற்காக ஒரேயொரு புள்ளடியை (X) மாத்திரம் பயன்படுத்த முடியும் என தேர் தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
எதிர்வரும் (மே) 06 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்காக தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களுக்கும்,தபால்மூல வாக்காளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு மாத்திரமே உரித்தாகும். அதாவது ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்குச்சீட்டு மாத்திரமே வழங்கப்படும்.
இத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற வாக்குச் சீட்டில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பெயர்களும், சின்னங்களும், சுயேச்சைக் குழுக்கள் போட் டியிடுவதாயின், சுயேச்சைக் குழுவொன்றின்
சொற்றொடரோடு அடையாளம் காட்டும் இலக்கம் மற்றும் சின்னம் மாத்திரமே அச்சி டப்பட்டிருக்கும். வேட்பாளரின் அல்லது வட் டாரங்களின் பெயர்கள் அல்லது இலக்கங்கள் இதில் குறிப்பிடப்படமாட்டாது.
வாக்குச் சீட்டின் மாதிரி
'அ' கட்சி
'ஆ' கட்சி
'இ'கட்சி
சுயேச்சைக் குழு 1
சுயேச்சைக் குழு 2
வாக்கினை அளிக்கும் போது உங்களுக்கு (வாக்காளர்) விருப்பமான கட்சியின் பெயர், சின்னம் அல்லது சுயேச்சைக் குழுவின் சொற்றொருடன் அடையாளம் காட்டும் இலக்கம் மற்றும் சின்னம் உள்ள நிரலுக்கு வலப்புறமாகவும், சின்னத்துக்கு முன்னாலும் உள்ள வெற்றுக்கூட்டில் ஒரேயொரு (X) புள் ளடியை மாத்திரம் இட்டு அடையாளமிடு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வாக்குச் சீட்டில் வேறெந்த சின்னத்தையும் இடுதல், வரைதல் அல்லது எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளுதல் அவசியமானதாகும். ஏனெனில் அவ்வாறு செய்தல் அதாவது பல்வேறு அடையாளங்களை வரைதல், அடையாளமிடல் போன்றன வாக்காளரை இனங்காண முயற்சிப்பதாகக் கருதப்பட முடியும் என்பதனாலாகும். வாக்களிப்பதற்காக ஒரேயொரு புள்ளடியை (x) மாத்திரம் பயன்படுத்த முடியும்.