Wednesday, 2 April 2025

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் குறித்த சட்ட திருத்தம் மே மாதம் பாராளுமன்றத்தில்..!!!

SHARE

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தங்களை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது, தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச ஊதியம் 21,000 ரூபாவாக உள்ளது. இந்த ஊதிய உயர்வு இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கு ஏற்ப உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச சம்பளத்தை அடுத்த ஆண்டு 35, 000 ரூபா வரை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
SHARE