Saturday, 26 April 2025

யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!!!

SHARE

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கொட்டகல - பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில் - பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.

அந்த இளைஞன் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் குறித்த மாணவனுக்கும் காதலிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இன்று அதிகாலை அவர் இவ்வாறு தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
SHARE