Tuesday, 15 April 2025

நாளையும் வெப்பம் அதிகரிக்கும்..!!!

SHARE

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினமும் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் வெப்பநிலை உயரக்கூடும் எனவும், கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
SHARE