Sunday, 13 April 2025

கணவன் ஒரு கட்சி, மனைவி ஒரு கட்சி ; யாழில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்..!!!

SHARE

இலங்கை 07 வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயராகி வருகின்றது.

பல கட்சிகளும் தம்முடைய வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் பிரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவன் ஒரு கட்சியின் வேட்பாளராகவும் மனைவி மற்றொரு கட்சியின் வேட்பாளராகவும் களமிறங்கியுள்ளமை பேசு பொருளாகியுள்ளது.

யாழ் மாநகராட்சி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் தம்பிதுரை றஜீவ் எனும் வேட்பாளர் களமிறங்கியுள்ளார்.

இதே யாழ் மாநகராட்சியின் வேட்பாளராக அவரது மனைவியான சோபனா றஜீவ் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்றார்.

ஒரு குடும்பத்துக்குள் இரு வேறு கட்சியின் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமை பேசு பொருளாகியுள்ளது.
SHARE