முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 மாணவர்களுக்கு மருத்துவத்துறை..!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 அல்லது 7 மாணவர்கள் மருத்துவத் துறைக்குத் தெரிவுசெய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி உயிரியல் பிரிவில், முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரி மாணவிகளான நர்த்திகா மாவட்டத்தில் முதலிடத்தையும், மதுவிழி இரண்டாம் இடத்தையும், அர்ச்சயா மூன்றாம் இடத்தையும், செம்மலை மகா வித்தியாலயத்தின் மாணவியான ஜதிகா நான்காம் இடத்தையும், முல்லைத்தீவு வித்தியானந்தக் கல்லூரி மாணவர்களான சஜிந்தன் ஐந்தாம் இடத்தையும், யதுர்சிகன் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 3ஏ பெறுபேறு கிடைத்துள்ளது