
இரண்டு நாள் காய்ச்சல் காரணமாக 5 மாதப் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவமொன்று உரும்பிராய் மேற்குப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதில் அதே இடத்தைச் சேர்ந்த தரின் தவிசா என்ற ஐந்து மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை(21) குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை(22) பிற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் மாலை குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு அறிவுறுத்தியுள்ளார்.