யாழ். இந்துவில் 55 மாணவர்களுக்கு 3A..!!!
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் 55 மாணவர்களுக்கு மூன்று பாடங்களில் “ஏ“ சித்தி கிடைத்திருக்கின்றது. 33 மாணவர்கள் இரண்டு பாடங்களில் “ஏ” சித்தி பெற்றிருக்கிறார்கள்.
உயிரியல் பிரிவில் 22 பேரும், பௌதீகவியல் பிரிவில் 27 மாணவர்களும், வர்த்தகத்துறையில் ஒருவரும் மூன்று பாடங்களிலும் “ஏ” சித்தியை பெற்றிருக்கிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
உயிரியல் விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் 1, 2, 3, 4 ஆம் இடங்கள், வர்த்தகத்தில் மாவட்ட நிலையில் முதலாம் இடம், பொறியியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட மாவட்ட நிலையில் முதலாம் இடம், பௌதீக விஞ்ஞானத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம், உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிலையில் இரண்டாம் இடம் யாழ் இந்துவுக்குக் கிடைத்துள்ளது.