ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் : 500 பேர் காயம்..!!!
ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.