அக்ஷய திருதியை நாளில் உருவாகும் 4 ராஜயோகங்கள்: இந்த 3 ராசிக்கு லட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கும்..!!!
இந்து மதத்தில் அக்ஷய திருதியை மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான நாளாகும். இந்நாளில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் எதை வாங்கினாலும் அது பெருகும். இந்த புனிதமான நாளில் லட்சுமி தேவி மற்றும் குபேரனை வழிபடுவதும், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு அக்ஷய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் பல மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன. அதுவும் இந்நாளில் கஜகேசரி ராஜயோகம், லட்சுமி நாராயண ராயோகம், சதுர்கிரக யோகம், மாளவ்ய ராஜயோகம் போன்ற 4 ராஜயோகங்கள் உருவாகின்றன.
இப்படி ஒரு சுபநாளில் பல ராஜயோகங்கள் உருவாவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இந்நாளில் சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் சிறப்பான அருளைப் பெறவுள்ளனர். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர்.
அத்துடன் அக்ஷய திருதியை நாளில் ரவி மற்றும் சர்வார்த்த சித்தி யோகமும் உருவாகிறது. இப்போது அக்ஷய திருதியை நாளில் உருவாகும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்ஷய திருதியை தினம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் லட்சுமி தேவி மற்றும் குபேரனின் ஆசியையும் பெறவுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக, உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகள் சில முக்கியமான பொறுப்புக்களை ஒப்படைக்கலாம். நிறைய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் புதிய தொழிலை தொடங்க சிறந்த காலம் இது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்ஷய திருதியையானது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். இதனால் வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கும். இதனால் பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். லட்சுமி தேவியின் ஆசியால் வாழ்க்கையில் சந்தோஷமும், செல்வமும் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்ஷய திருதியை தினமானது மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொழிலில் பெரிய அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கலாம்.
வேலை செய்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.