மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை மேலோங்கும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவு லாபத்தை ஈட்டி எடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கூடுமானவரை செலவுகளை குறைத்து, சேமிப்பை உயர்த்த பாருங்கள். விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபம் போட்டு வழிபாடு செய்தால் நன்மை நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப செலவுகள் நிறைந்த வாரமாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் மந்தமான போக்கு நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை எக்காரணத்தை கொண்டும் பகைத்துக் கொள்ளக்கூடாது. பொறுமையாக பேசுங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய்க்கிழமை முருகருக்கு விளக்கு போட்டு வேண்டிக் கொண்டதால், பிரார்த்தனை நிறைவேறும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவது, வாடகை வீடு மாற்றுவது அல்லது வண்டி வாகனம் மாற்றுவது, இதுபோல ஏதாவது வேலைகள் இருந்தால் இந்த வாரம் முயற்சி செய்யலாம். நன்மை நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது நல்லது. எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை இந்த வாரம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். மற்றபடி உறவுகளோடு விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். அவ்வளவுதான். தினமும் குலதெய்வ வழிபாடு செய்வது நன்மையை தரும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன அழுத்தம் நீங்க கூடிய வாரமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதியான சூழ்நிலையில் இந்த வாரத்தை கழிக்க போகிறீர்கள். புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த நன்மை நடக்கும். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடல் உபாதைகள் நீங்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம். அனுமனை வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பொறுமை தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆனால் அந்த உதவியின் மூலம் உங்களுக்கு கெட்ட பெயர் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமை தேவை. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க கூடாது. வியாபாரத்தில் அகல கால் வைக்காதீர்கள். புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். வாராஹி வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். செலவுகள் அதிகரிக்கும். உடல் அசதி அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். விளையாட்டுப் போக்காக இருக்கக் கூடாது. வெயில் சமயத்தில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை உட்கொள்ள வேண்டாம். நீர்மோர் இளநீர் இதுபோல பானங்களை அருந்துங்கள். துர்க்கை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நீண்ட நாள் உங்கள் கைக்கு வந்து சேராத பணம், சொத்து உங்கள் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிரிகள் கூட சரண்டர் ஆகி நண்பர்களாக மாறிவிடுவார்கள். வியாபாரத்தை பொருத்தவரை ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். வாடிக்கையாளர்களோடு பணிவோடு பேசுங்கள். நிதானத்தோடு நடந்தால் வியாபாரத்தில் வெற்றிகானலாம். சிவன் வழிபாடு உங்களுக்கு சிறப்பான வார்த்தையை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் கவனம் தேவை. அவசரப்பட்டு யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. மூன்றாவது நபருடைய பிரச்சினையில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையற்ற வீண் விரைய செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரிடமும் எந்த விஷயத்திலும் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். யாரை நம்பியும் ஜாமீன் கை எழுத்து போடாதீங்க. இவர் நல்லவர், இவரை நம்பி பணத்தை கொடுக்கலாம் என்று வாயில் கூட சொல்லாதீங்க. பிரச்சனை வந்து உங்கள் தலைமையில் விடியும். தினமும் உங்கள் ஊர் மாரியம்மனை கும்பிட்டால் நன்மை நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக இருக்கும். பெயர் புகழ் அந்தஸ்து கூடும். வருமானம் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். உங்களை பாராட்டி, அவார்டு வழங்க கூட வாய்ப்புகள் இருக்கிறது. கலைஞர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்க, நல்ல பெயர் கிடைக்கும். சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முடித்துக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். இதுவரை பார்க்காத லாபத்தை உங்களுடைய தொழில் உங்களுக்கு கொடுக்கும். அயராது உழைக்கும் பட்சத்தில், நீங்கள் இந்த வாரம் வெற்றியாளராக திகழலாம். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும் தைரியமும் உயர்ந்து காணப்படும். எல்லா விஷயத்தையும் துணிச்சலாக செய்து விடுவீர்கள். யாருக்கும் பயப்பட மாட்டீர்கள். பேச்சு திறமை வெளிப்படும். எவ்வளவு இக்கட்டான வேலையாக இருந்தாலும், அடுத்தவர்களிடம் பேசி அந்த வேலையை செய்து முடித்து விடுவீர்கள். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வழக்கறிஞர் ஆசிரியர்களுக்கு எல்லாம் இந்த வாரம் நல்ல அனுகூலமான வாரமாக இருக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணங்களில் மூலம் நன்மை ஏற்படும். பைரவர் வழிபாட்டால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனது ஒரு நிலையில் இருக்காது. எந்த ஒரு சூழ்நிலையும் தடுமாற்றத்தோடு இருப்பீர்கள். நிலையான முடிவை எடுக்க மாட்டீர்கள். புது முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூர பயணத்தில் கவனம் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற டென்ஷன்களை இழுத்து, நீங்களே உங்கள் தலை மேல் போட்டுக்கொள்ள வேண்டாம். வியாபாரத்திலும் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. பசு மாட்டிற்கு தினமும் இரண்டு வாழைப்பழம் வாங்கி கொடுங்கள் நன்மை நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை செய்யக்கூடிய வாரமாக தான் இருக்கிறது. எல்லா வேலைகளையும் சரியாக பிளான் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நன்மையை தரும். உடல் உபாதைகள் கொஞ்சம் இருக்கும். பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். இருந்தாலும் வாழ்க்கைக்கு தேவையான நன்மைகளை செய்து தரும். அடுத்தவர்களுடைய பேச்சை அலட்சியப்படுத்தாதீர்கள். அனுபவ சாலிகளை பக்கத்தில் வைத்துக் கொள்வது உங்களுக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை முழுசாக நம்ப வேண்டாம். வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். முருகன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும்.