Tuesday, 29 April 2025

இன்றைய ராசிபலன் - 29.04.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயப்பட வேண்டாம். முருகனை வழிபாடு செய்துவிட்டு, வேலைகளை துவங்குங்கள். நல்லது நடக்கும். ஆரோக்கியம் பெருகும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் இருக்கட்டும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடன் இருக்கும் நண்பர்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வருமானம் சீராகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். உறவினர்களுக்கு இடையே இருந்த விரிசல் சரியாகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முருகர் வழிபாடு தீராத கஷ்டத்திற்கு ஒரு தீர்வை தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தால் மனம் தளரக்கூடாது. முருகரை நினைத்துக் கொள்ளுங்கள். வெற்றி தானாக உங்கள் பின்னால் வரும். நேரத்தை வீணடிக்காமல் சோம்பேறித்தனத்தை தூர வைத்து விட்டு, வேலையில் ஆர்வம் கட்டினால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன கவலைகள் விலகும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டவீர்கள். முருகர் வழிபாடு உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தரும்.

கன்னி


கடனி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும். சேமிப்பு உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்புகள் நீங்கும். வெயிலில் அதிகம் வெளியே சுற்ற வேண்டாம். நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலையில் மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்காது. வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். இதெல்லாம் சரியாக, இன்று முருகர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத முன்னேற்றம் சந்தோஷத்தை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். நல்ல பெயர் தேடி வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல புரிதல் இருக்கும். உங்கள் மீது இருந்த கெட்ட பெயர் விளக்கம். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபத்தை எடுக்க, அயராது உழைப்பீர்கள் வெற்றியும் காண்பீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. பிள்ளைகளால் பிரச்சனை, பெரியவர்களால் வாக்குவாதம் என்று சில பல எதிர்மறையான விஷயங்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க, இந்த நாள் இறுதியில் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இறையருள் கிடைக்கும். வேலையில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் வந்து போகும். பெருசாக பிரச்சனைகள் இல்லை.
SHARE