Monday, 28 April 2025

இன்றைய ராசிபலன் - 28.04.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். பிரச்சனைகளை சமாளிக்க மன உறுதியோடு செயல்படுங்கள். துணிந்து நடந்தால் துன்பமில்லை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீண் விரைய செலவுகளை குறைக்க கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக கவனம் தேவை. நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புது நண்பர்களோடு பழகும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப செலவுகள் ஏற்படும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் நாள். கமிஷன் தொழிலும் நல்ல வருமானத்தை கொடுக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் படு சுறுசுறுப்பு இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். அடுத்த நாளை எண்ணி கவலைப்பட மாட்டீர்கள். இன்றைக்கான வேலையை சரியாக முடித்து விடுவீர்கள். கடவுளின் மீது நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் இருக்கும். இதனால் வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற மன கஷ்டங்களை தூக்கி வெளியே போடுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இறைவழிபாடு செய்தால் பிரச்சனைகள் சரியாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. எதிலும் சோம்பேறித்தனம் கூடாது. அன்றாட வேளையில் கவனம் செலுத்த வேண்டும். வேலைகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற தாமதம் இருந்தால், இந்த நாள் இறுதியில் பிரச்சனை உங்களுக்கு தான் வரும் பார்த்துக்கோங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம். வேலையில் உங்களுடைய ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளுடைய பாராட்டும் கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. பண வரவு இருக்கிறது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சேர்க்கைக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்கும். மனது நிம்மதி அடையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் கைகூடி வரும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த அயராது போராடுவீர்கள். வெற்றியும் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் பிறக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். பெரிய அளவில் டென்ஷன் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் நடந்து முடியும். நிதி நிலைமை சீராக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இறைவனின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். மனைவி பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையிலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை முதலீடு செய்யும்போது மட்டும் கவனம் இருக்கட்டும். அதிக கடன் வாங்காதீங்க செலவை குறைக்கவும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். சமூக வலைதளங்களில் அதிக நேரம் நேரத்தை செலவு செய்ய வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
SHARE