இந்த வார ராசிபலன் 28.04.2025 முதல் 02.05.2025 வரை..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் எடுத்த முயற்சிகளில் சுலபமாக வெற்றியடையலாம். புதுசாக வேலை தேடுவது, புதுசாக வியாபாரம் துவங்குவது, புதுசாக வங்கியில் சேமிப்பு துவங்குவது, இதுபோல நிறைய நல்ல விஷயங்களை துவங்கினால் உங்களது வாழ்க்கையில் நல்லதே நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் துவங்கலாம். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் ஹெல்மெட் போன்ற உயிர்காக்கும் கவசங்களை உதாசீனப்படுத்தக் கூடாது. தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். மூன்றாவது நபர்களை எளிதில் நம்பக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். வேலையைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளோடு அனுசரணையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்லபடியாக முடியும். சுப செலவுகள் ஏற்படும். உங்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். தினமும் விநாயகரை கும்பிடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படும் வாரமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் திறமையாக சிந்திப்பீர்கள். எளிதில் ஏமாற மாட்டீர்கள். கலைஞர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். வாடிக்கையாளரையோ அல்லது பார்ட்னரையோ பகைத்துக் கொள்ளக் கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு தேவையான விஷயங்களை பற்றி சிந்திப்பது நன்மை தரும். தினமும் முருகர் வழிபாடு செய்யுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி காண்பீர்கள். இந்த வேலைகளை எப்படி செய்வது என்று தெரியாமல் குழப்ப நிலையில் இருப்பீர்கள். இருந்தாலும் குழப்பத்தை எல்லாம் தாண்டி, உங்களுடைய கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை உயரும். நீங்கள் கஷ்டப்பட்டதற்கு உண்டான பலன் கிடைக்கும். எதிர்கால சேமிப்பு உயரும். சந்தோஷம் இரட்டிப்பாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளுடன் நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். வாராஹி வழிபாடு செய்யுங்கள் நன்மை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. நாலு பேர் மத்தியில் உங்களுடைய பேச்சு மட்டும்தான் எடுபட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்கக்கூடாது. உறவுகளோடு விட்டுக் கொடுத்து நடந்தால் பிரச்சனை இல்லை. வாக்குவாதம் செய்தால் நல்ல உறவுகள், நண்பர்களை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை எல்லாம் நல்லபடியாக நடக்கும். லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இருக்கும். சனிக்கிழமை பைரவர் வழிபாடு செய்யுங்கள் நன்மை நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானமாக சிந்திக்க நேரமே இருக்காது. அந்த அளவுக்கு ஓட்டம் அதிகமாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் தலை மேல் பொறுப்புகள் காத்துக் கொண்டிருக்கும். எல்லா விஷயங்களையும் செய்து முடிப்பதற்குள். இந்த வாரம் எப்படி முடிந்தது என்று தெரியாது. பிசியான இந்த வாரத்தில், வேலையும் வியாபாரமும் நல்லபடியாக நடக்கும். கொஞ்சம் பணம் செலவாகும். சுபசெலவுகளை கொஞ்சம் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இருக்கும். தினமும் விநாயகரை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் ரொம்பவும் கண்டிஷனோடு நடந்து கொள்வீர்கள். நீங்கள் மேல் அதிகாரிகளாக இருந்தால், உங்களிடம் வேலை செய்பவர்களை மிகவும் அதிகாரத்துடன் நடத்துவீர்கள். சரியான நேரத்தில் சரியான முறையில் எல்லா வேலையையும் நடத்தி முடிக்க போராடுவீர்கள். இதனால் சின்ன சின்ன எதிரி தொல்லைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் கடமையில் சரியாக இருந்தால் ஒரு மன திருப்தி வரும் அல்லவா. அது, இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். தினமும் மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா புது விஷயங்களை கற்றுக் கொள்ளவும் முன்பாக நின்று உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும், மேலும் அடுத்தது என்ன படிக்கலாம் என்ற ஆலோசனை, எதிர்கால திட்டங்களை தீட்ட இந்த வாரம் உகந்த வாரமாக இருக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. படிக்க முடியாத பிள்ளைகளுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். எதாவது ஒரு வகையில் பணம் உங்கள் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையலாம். வசூலாகாத கடன் வசூல் ஆகலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள், ஒரு முடிவுக்கு வந்து, உங்களுக்கு ஒரு நன்மையை கொடுக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும். அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதையில் குறைவு வைக்காதீங்க. எல்லோரிடத்திலும் சமமாக பழகுங்கள். தினமும் ஈசன் வழிபாடு இன்னல்களை போக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்கோபம் குறைய வேண்டும். இல்லையென்றால் நல்ல நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லும். வேலையிலும் வியாபாரத்திலும் அனுசரணை தேவை. வாழ்க்கை துணையிடம் பொய் சொல்ல வேண்டாம். பிள்ளைகளோடு கோபத்தோடு பழக வேண்டாம். வேலை வியாபாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறீர்களோ, அதே அளவுக்கு குடும்பத்தின் மீதும் அக்கறை காட்ட வேண்டும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மூன்றாவது நபர்களை தேவை இல்லாமல் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். ஹனுமன் வழிபாடு உங்களுக்கு இந்த வாரம் மனதை உறுதி செய்யும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்கால சேமிப்பை உயர்த்துவது நல்லது. குடும்பத்தில் உங்களுடைய குரலை உயர்த்தி பேச வேண்டாம். உறவுகளோடு அனுசரணை தேவைப்படும். தேவையற்ற சண்டைகள் வந்தால் உறவுகளுக்குள் இருக்கும் ஒற்றுமை நிலை குலைந்து போகும். ஜாக்கிரதை, வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன்கிழமை பெருமாள் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெளியூர் பயணங்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு சுற்றுலா செல்லுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் உண்டு. சேமிப்பு கரையும். பிள்ளைகளுடைய ஆசைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் அவ்வப்போது வந்து போகும். வியாபாரத்தை பொருத்தவரை பெரிசாக லாபம் இருக்காது. நஷ்டம் வராமல் இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். முருகன் வழிபாடு நன்மை தரும்.