இன்றைய ராசிபலன் - 27.04.2025..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நண்பர்கள் இவர்களை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. உற்சாகத்தோடு இருப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷத்திற்கு 100% கேரன்டி. இறை வழிபாட்டில் மனது அதிகமாக ஆர்வம் காட்டும். இன்று முன்னோர்களின் ஆசி, குல தெய்வத்தின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மற்றபடி அலுவலக வேலை வியாபாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஷாப்பிங் போகாதீங்க. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்றாலும் பணத்தின் மீது ஒரு கண் இருக்கட்டும். வீணான பொருட்களை வாங்கி, பணம் விரயமாக வாய்ப்புகள் இருக்கு. வேலையிலும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். செய்ய வேண்டிய வேலையை அந்த நேரத்திற்கு செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். மற்றபடி வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நிதி நிலைமை சீராகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் தேவை. பொறுமையை இழந்து நடந்து கொள்ளக் கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று, நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்வீர்கள். யாரேனும் பிரச்சனைக்கு வந்தாலும் அதை பெருசாக கவனத்தில் கொள்ள மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வது, ஆன்மீகத்தில் ஈடுபடுவது, இது போன்ற நல்ல காரியங்களில் கலந்து கொள்வீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பார்த்துக்கோங்க.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் துணிச்சலோடு செயல்பட வேண்டும். வம்பு வழக்கு பஞ்சாயத்து என்று வந்தால் உங்கள் பக்கம் இருக்கும் வாதத்தை முன் வையுங்கள். எல்லா இடத்திலும் அமைதியாக இருந்தால், நம்முடைய சுயமரியாதை கெட்டுப் போகும். தன்னம்பிக்கையும் தைரியத்தையும் வர வைத்துக் கொள்ள முன்னோர் வழிபாடு, அம்பாள் வழிபாடு உங்களுக்கு இன்று நிச்சயம் கை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று கேட்காமலேயே நல்ல பெயர் வரப்போகிறது. வீட்டில் உறவுகளோடு நல்ல ஒற்றுமை ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாராட்டு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. நிதானம் தேவை. கோபம் வரவே கூடாது. வேலையில் கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களோடு வாக்குவாதம் செய்யாதீர்கள். இருக்கும் நல்ல பழக்கவழக்கம், நல்ல நண்பர்கள் உங்களை விட்டு விலக உங்கள் முன்கோபமே காரணமாக மாறலாம். இன்று கோபம் கூடாது நினைவில் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். விடுமுறை நாள் என்பது கூட உங்கள் நினைவில் இருக்காது. உங்கள் கையில் கொடுத்த கடமைகளை சீராக முடித்து விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீக ரீதியான ஈடுபாடு அதிகமாக இருக்கும். இறை வழிபாட்டில் மனநிறைவை காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அடம்பிடித்து எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. நாலு பேர் மத்தியில் உங்களுடைய கோபத்தை வெளி காட்டக் கூடாது. உறவுகளோடு பொறுமையாக பேச வேண்டும். தலைகனத்தால் தன்னிலை அறியாமல் நடந்து கொள்பவர்களுக்கு, இன்று கட்டாயம் தண்டனை உண்டு பார்த்துக்கோங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நன்மைகள் உண்டு. பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். நிதி நிலைமை மேலோங்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.