Saturday, 26 April 2025

இன்றைய ராசிபலன் - 26.04.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் தேவைக்கு ஏற்ப பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். சந்தோஷம் இருக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக கவனத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய பொறுப்புகள் கொஞ்சம் கூட கூடிய நாளாக இந்த நாள் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனை மனக்கவலை, நேரத்தை வீணடிக்கும். வேலையில் ஆர்வத்தை காட்ட விடாமல் தடுக்கும். இதனால் சின்ன சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனத்தை சிதர விடாதீங்க. மனதை ஒருநிலைப்படுத்தினால் நிச்சயம் வேலைகள் சரியாக நடக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் தேவை. உங்களுடைய உரிமையை நீங்கள் தான் கேட்டு போராடி பெற வேண்டும். எல்லா விஷயத்திற்கும் மௌனம் சாதித்தால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் இன்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு நிம்மதியை தரும். வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்தை கொடுப்பதற்கு இன்று நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். ஒரு நூலை உங்கள் கையில் கொடுத்தால் கூட அதை பிடித்து கொண்டு, முன்னேறுவதற்கு நிறைய யோசனை செய்வீர்கள். வாய்ப்புகளை இன்று சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனதிருப்தி இருக்கும். சந்தோஷம் இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனநிம்மதி, இரவு நல்ல தூக்கத்தை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. எந்த ஒரு வேலையிலும் அலட்சியப் போக்கு இருக்கக் கூடாது. உங்களுடைய கவனக்குறைவால் பிரச்சனைகள் பெருசாக வாய்ப்புகள் இருக்கிறது. பொறுப்புகளை உங்கள் கையில் ஒப்படைத்தால், அதில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனது இல்லை என்றால், பொறுப்புகளை நிராகரிப்பது நல்லது.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபரின் சந்திப்பு கவலைகளை மறக்கச் செய்யும். வெளியூர் பயணங்கள் சந்தோஷத்தை கொடுக்கும். கடன் சுமை குறையும். நீண்ட நாள் முடிக்க முடியாத, இழுபறியாக இருந்து வந்த காரியத்தை இன்று கையில் எடுக்கலாம். உங்களுக்கு சாதகமான வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. முன்கோபடக்கூடாது. வார்த்தைகளில் நிதானம் தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மேலதிகாரிகளை அனுசரித்து தான் செல்ல வேண்டும். தவறு உங்கள் பக்கம் இல்லை என்றாலும் சில விஷயங்களில் இன்று அனுசரணை தேவை. வாக்குவாதம் செய்யாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வீடு தேடி வரும். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தர்ம சங்கடம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும். தேவையற்ற பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். சிந்தனையை குறைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்காக முயற்சி செய்யலாம். உங்களுடைய முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறவினர்களோடு ஆலோசனை கேட்கலாம். இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றி தரக்கூடிய வகையில் அமையும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வாய்ப்புகள் இருக்கிறது. மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்வீர்கள். நல்ல சாப்பாடும் நல்ல தூக்கமும் மனதிற்கு அமைதியை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் குழப்ப நிலையில் இருப்பீர்கள். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் கடன் கொடுக்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பஞ்சாயத்தில் முன் நின்று இரண்டு பேருக்கு சமரசம் கூட செய்து வைக்கக் கூடாது. இன்று கவனம் ஆக இருந்தால் மட்டுமே பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும்.
SHARE