Wednesday, 16 April 2025

இன்றைய ராசிபலன் - 16.04.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனை பூதாகரமாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் எவ்வளவு பெரிய இடியே வந்து விழுந்தாலும், உங்களுடைய அமைதி நிலையிலிருந்து நீங்கள் தடுமாற மாட்டீர்கள். பிரச்சனைகளை பக்குவமாக கையாண்டு அதிலிருந்து வெளிவரக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். கவலைப்படாதீங்க, கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் துவக்கத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். மதிய நேரத்திற்கு மேலே நீங்களே பிரச்சனைகளை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்ய துவங்கி விடுவீர்கள். மாலை குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். ஆகவே காலை நேரம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இன்று நீங்கள் உங்கள் எதிரிகளை கூட சுலபமாக உங்கள் வசப்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய பேச்சில் இனிமை இருக்கும். திறமை இருக்கும். புத்திசாலித்தனம் வெளிப்படும். வேகத்தோடு விவேகமும் சேர்ந்து செயல்படக்கூடிய நாள். வெற்றி வாகை சூடக் கூடிய நாள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான, உயர்வு தரும் நாளாக இருக்கும். நேரத்தை சரியாக செலவு செய்யுங்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்தால் நீங்கள் தான் இன்றைய ராஜா ராணி. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சண்டைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற எதிரிகள் உருவாகலாம். ஆகவே யாரையும் நீங்களாக சென்று பகைத்துக் கொள்ள வேண்டாம். வம்பு சண்டை வந்தால் கூட ஒதுங்கி செல்லுங்கள். யாராவது ஏதாவது திட்டினால் சரி சரி என்று தலையாட்டிக் கொள்ளுங்கள். இது சரி, இது தவறு என்று கருத்துக்களை சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். விதாண்டா வாதம் வேண்டாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகமாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். வேலை பணம் டென்ஷன் என்று மட்டும் இருக்காதீங்க பாத்துக்கோங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் வியாபாரத்திலும் நிறைய விஷயங்களை ஆராய்ச்சி செய்து நீங்களே கற்றுக் கொள்வீர்கள். நிறைய பிரச்சனைகளுக்கு நீங்களே ஒரு முடிவையும் கொண்டு வருவீர்கள். ஆர்வக்கோளாறு அதிகமாகி அப்படியே வேலையில் ஐக்கியமாக போறீங்க. நேரம் போறதே தெரியாது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். ரொம்ப ரொம்ப பின் தங்கிய நிலையில் மக்காக இருந்தவர்கள் கூட இன்று அறிவாளியாக நடந்து கொள்வீர்கள். ஒரு சான்ஸ், வேலையில் முன்னேற வியாபாரத்தில் முன்னேற கடவுள் உங்களுக்கு கொடுப்பான். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். அந்த மாற்றம் உங்களை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கூட்டிச் செல்லும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பொய் பேசக்கூடாது. குறுக்கு வழியில் செல்லக்கூடாது. ஆபிஸ்க்கு போற வழி இல்ல. வாழ்க்கை பாதையில் நேர்மை தேவை. ஜாக்கிரதை, யாராவது கெட்ட பழக்கம் உள்ள நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்களை இப்போதே வெட்டி விடுங்கள். உங்களுக்கு எதிர்காலத்தில் நன்மை நடக்கும். இல்லை என்றால் பெரிய பிரச்சனை காத்திருக்கு.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று அயராது உழைப்பீர்கள். பத்து ரூபாய் பணத்திற்காக, 100 ரூபாய்க்கு வேலை செய்வீர்கள். இருந்தாலும் உங்களுக்கு தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. வேலை செய்வது மட்டும்தான் உங்கள் கடமை. அதற்கான பலனை இறைவன் உங்களுக்கு நிச்சயம் கொடுப்பான் முயற்சிகளை கைவிட வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். புதுப்புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகளும் தேடி வரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீண்ட நாட்களாக கொடுக்க முடியாத கடனை திருப்பிக் கொடுத்து மன நிம்மதி அடைவீர்கள். உங்களுக்கு வரவேண்டிய பணம் உங்கள் கையை வந்து சேரும் சந்தோஷம்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று அடக்கம் ரொம்பவும் வெளிப்படும். உயர் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். நல்லது தான், இருந்தாலும் சக ஊழியர்களுக்கு இது பிடிக்காது. உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து சுற்றி இருப்பவர்கள் பொறாமைப் படுவார்கள். எல்லாவற்றையும் சரி கட்ட வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது. கீழே இருப்பவன் கொஞ்சம் உயர்ந்து நிலைக்கு வரும்போது, இதெல்லாம் சகஜம் தாங்க. புரிஞ்சி நடந்துக்கோங்க.
SHARE