இந்த வார ராசிபலன் 14.04.2025 முதல் 20.04.2025 வரை..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள். நீண்ட நாட்களாக கஷ்டப்பட்டு செய்த வேளையில் வெற்றி காண்பீர்கள். மேல் இடத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். பதிவு உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை தேவையற்ற டென்ஷன்கள் குறையும். லாபத்தை அதிகரிக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விஷயங்களில் ஒரு மன நிம்மதி கிடைக்கும். கமிஷன் தொழில் நன்றாக கல்லா கட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபட மேலும் வெற்றி உங்கள் கையை வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் சீர்படும். தேவையற்ற பண பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதி அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களோடு சந்தோஷத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கே நிலவும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. இரண்டு பேருக்குள் ஈகோ பார்க்க கூடாது. ஜாக்கிரதை, பிள்ளைகளுடைய நலனில் கவலை கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தினமும் விநாயகரை கும்பிடுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பக்குவத்தோடு நடந்து கொள்வீர்கள். உங்களுடைய திறமை வெளிப்படக் கூடிய வாரமாக இருக்கும். இடம் பொருள் ஏவல் தெரிந்து எந்த காயை நகர்த்தினால், எப்படி லாபத்தை அடையலாம் என்பதை சிந்தித்து செயல்படுவீர்கள். சந்தோஷம் அதிகரிக்கும் வாரம். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் நீங்கள் தான் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாயிகளுக்கும் இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக இருக்கிறது. கோர்த்து கேஸ் வழக்குகளை மட்டும் அடுத்த வாரம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சனிக்கிழமை பைரவரை வழிபடுவது நன்மை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். வேலையில் சுறுசுறுப்பு படுவேகமாக இருக்கும். எதிரிகள் எல்லாம் ஒதுங்கி நிற்பார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். வேலை வியாபாரம் எல்லாம் இந்த வாரம் அமோகமாக நடந்தாலும், குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். உறவுகளுடன் அனாவசமாக வாய் கொடுத்து மாட்டிக்காதீங்க. தினமும் சிவன் வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரணையோடு நடத்த வேண்டும். முன்கோபத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்திலும் அப்படித்தான். வாடிக்கையாளர்களோடு பார்ட்னரோடு கோபத்தை காட்டக் கூடாது. பொறுமையாக இருக்கவும். வெளியிடங்களில் சாப்பிடும் போது கவனம் தேவை. ஆரோக்கியம் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை. உங்கள் தெருவில் இருக்கும் நாய்களுக்கு தினமும் பிஸ்கட் வாங்கி போடுங்க நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து விடுபடக்கூடிய வாரமாக இருக்கும். இந்த வார இறுதியில் அப்பாடா என்று பெருமூச்சு விடுவீர்கள். பிரச்சனைகளை சமாளிக்க சில சமயம் தந்திர வேலைகளில் ஈடுபட வேண்டி இருக்கும். பொய் சொல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேறு வழி கிடையாது. நல்லது நடக்க வேண்டும் என்றால் நாலு பொய் சொல்லலாம் என்று பெரியவர்களே சொல்லி இருக்கிறார்கள். ஆகவே உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள, பிரச்சனையில் இருந்து வெளிவர, சில குறுக்கு வழியை இந்த வாரம் சந்திக்க வேண்டி தான் இருக்கும். ஜாக்கிரதையாக இருங்கள். தினமும் குலதெய்வத்தை வழிபடுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சிந்தனைகள் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய மன பயம், தேவையற்ற குழப்பங்கள் நிலவும். இதனால் வேலையில் முழுசாக கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தையும் முழுசாக கவனிக்க முடியாது. சிந்தனையில் நேரம் அதிகமாக வீணாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சிந்திக்கலாம் தவறு கிடையாது. இருக்கும் வேலையை நிறுத்திவிட்டு சிந்திப்பது தவறு. கணவன் மனைவியும் மனம் விட்டு பேச வேண்டும். ஒருவருக்கு ஒருவர் எந்த விஷயத்தையும் மறக்காமல் இருந்தால், இந்த வாரம் பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு கிடைக்கும். தினமும் ஒரு டைம் டேபிள் போடுங்க. இந்த நேரத்திற்கு இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று. வேலையை முடித்துவிட்டு பிறகு எல்லா பிரச்சினைகளையும் கவனிக்கலாம் தினமும் முருகரை கும்பிட்டால் நன்மை நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சமுதாயத்தில் அந்தஸ்து கௌரவமும் உயரக்கூடிய வாரமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் உங்களைத் தாழ்த்தி பேசியவர்கள் உங்களை அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. விடாமுயற்சியோடு செயல்பட்டமைக்கு கடவுள் இந்த வாரம் உங்களுக்கான பரிசை கொடுக்கப் போகின்றான். எதிரிகளை வெல்லும் வாரம் இது. சந்தோஷம் பிறக்கும் வாரம் இது. இறைவனுக்கு மறக்காமல் நன்றி சொல்லுங்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கப் போகிறது. உங்களுடைய வியாபாரத்தை பல மடங்கு முன்னேற்ற அயராது உழைப்பீர்கள். ஒரே ஒரு கடை வைத்திருப்பவர்கள், அடுத்த பிரான்ச் ஓபன் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் இந்த வாரம் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் சில எதிரிகள் தொல்லையை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் அம்மன் வழிபாடு உங்களுக்கான கஷ்டங்களை நீக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகளும் உண்டாகும். சில பேருக்கு கடன் பிரச்சினை இருக்கும். கடனை திருப்பித் தருவதில் தாமதம் ஏற்படும். இதனால் சில பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை வரலாம். கடன் வைத்திருப்பவர்கள் இந்த வாரம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். தினமும் பெருமாள் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் நன்மை உண்டு.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானமும் பொறுமையும் அவசியம் தேவை. வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசக்கூடாது. உங்களுடைய வெற்றி, நீங்கள் வாங்கிய பொன் பொருள் சேர்க்கை எல்லாம் அனாவசியமாக வெளி ஆட்களிடம் தம்பட்டம் அடிக்க வேண்டாம். கண் திருஷ்டி பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பேசுவதில் நிதானம் தேவை. முடிந்தால் பேசவே பேசாமல் இருங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. தேவையற்ற பேச்சுக்கள், தேவையற்ற கெட்ட பெயர் அவமானங்களை கொண்டு வந்து சேர்த்து விடும். தினமும் ஒரு மணி நேரம் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்தால் நன்மை உண்டாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்யலாம். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம், மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கலாம், இப்படி ஏதோ ஒரு நல்லது கட்டாயம் உங்களுக்கு நடக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும். கெட்ட சவகாசம் தேவை இல்லை. யாராவது உங்களுக்கு தீமை செய்வதாக மனதில் பட்டால் உடனடியாக அவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள். பாவ பட்டால் இறுதியில் பிரச்சனை உங்களுக்கு தான் வந்து விடியும். தினமும் மீனாட்சி அம்மனை கும்பிடுங்கள் நல்லது நடக்கும்.