Sunday, 13 April 2025

இன்றைய ராசிபலன் - 13.04.2025..!!!

SHARE

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் தொல்லைகள் பின் தொடரக்கூடிய நாளாக இருக்கும். மனதில் நிம்மதி இருக்காது. மன நிம்மதியை கெடுப்பதற்கு நாலு பேர் உங்களை சுற்றி வேலை செய்து கொண்டே இருப்பார்கள். இன்றைய நாளை அமைதியாக நகர்த்தி செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தான் பொறுமை காக்க வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். விடுமுறை நாளை ஜாக்கிரதையாக கையாளுங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்று கூட பார்க்காமல் உங்கள் கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். இந்த நாள் சந்தோஷமாக இருக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். நீண்ட தூர பயணங்கள் சந்தோஷமாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் ஊர் சுற்றி நேரத்தை செலவு செய்வீர்கள். வேலை வியாபாரம் எல்லாம் எப்போதும் போல நடக்கும். பெரியதாக பிரச்சனை இருக்காது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வேலையில் ரொம்பவும் சரியாக நடந்து கொள்வீர்கள். மேல் அதிகாரிகளுடைய பாராட்டை பெறுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுவீர்கள்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பங்களிலிருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு தீர்க்கமான முடிவை எடுப்பீர்கள். வியாபாரத்தை கூடுதல் பொருப்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். சோம்பேறித்தனமாக இருந்தால் இருக்கும் நல்ல வாய்ப்புகள் எல்லாம் கைநழுவி செல்ல கூடும் ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர்கள் பேசக்கூடிய அனாவசிய பேச்சுக்களை செவிகளில் வாங்கிக் கொள்ள மாட்டீர்கள். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வியாபாரத்திலும் எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது. இருந்தாலும் எல்லாவற்றையும் கையாளும் அளவுக்கு மனப்பக்குவம் உங்களுக்கு இருக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளுடைய அனுசரணை கிடைக்காது. நண்பர்களோடு பிரச்சனை, வீட்டில் கணவன் மனைவி பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்கள் இளைஞர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். பைக் ரேஸ், கார் ரேஸ் இதுபோல எந்த ஒரு விபரீத விளையாட்டுக்கும் செல்லக்கூடாது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் மேன்மை அடையக்கூடிய நாளாக இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். பிரச்சனைக்கு உண்டான தீர்வினை கண்டுபிடித்து விடுவீர்கள். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். சில பேருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் இருக்கட்டும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வீட்டை சுத்தம் செய்வீர்கள். வீட்டில் பழுதான பொருட்களை எல்லாம் சரி செய்வீர்கள். இப்படி உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு, வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, நிம்மதியாக ஓய்வும் எடுப்பீங்க. நல்ல சாப்பாடு, நல்ல வேலை, நல்ல தூக்கம் இது மூன்றும் உங்களுக்கு சரியாக கிடைக்கும் நாள் இன்று.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. குடும்பத்திற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. மனைவிக்கு பிடித்த பொருட்களை வாங்கி பரிசு கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இரட்டிப்பாகும் ‌.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வரும். தேவையற்ற குழப்பங்கள் வரும். வெளியூர் செல்வதாக இருந்தால் ஐடி கார்டு எல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுங்கள். இல்லை என்றால் சின்ன சின்ன தாமதங்களால் பிரச்சனைகள் ஏற்படும் ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் மேம்பாடு இருக்கும். வீட்டில் பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். மனைவி குழந்தை என்று இந்த நாள் சந்தோஷமாக இருக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
SHARE