மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான செய்தி வரக்கூடிய நாள். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். சேமிப்புகள் கொஞ்சம் கரைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் கூடுதல் செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்னைக்கு ஷாப்பிங் போகாதீங்க. வியாபாரத்தில் முதலில் செய்வதற்கு முன்பு பலமுறை யோசிக்கவும். யாருக்கும் கடனாக கூட இன்று பணம் கொடுக்க வேண்டாம். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். நஷ்டமும் லாபமாக மாறிவிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்தில் இருந்து வெளிவரக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சனைகளுக்கு தீர்க்கமான ஒரு முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் இன்று முடிவுக்கு வரும். பெண்டிங்கில் இருக்கும் வேலையை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் இன்று தீர்வு காணலாம். நல்லதே நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற அயராது உழைப்பீர்கள். இன்று நீங்கள் செய்யும் முதலீடு எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெற்று தரும். பிள்ளைகளுடைய நலனில் கொஞ்சம் அக்கறை காட்டவும். ஆரோகியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். உங்களுடைய சுறுசுறுப்பு இன்று படு வேகமாக இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரும் நாளாக அமையும். வியாபாரத்திலும் வேலையிலும் புது முயற்சிகளில் ஈடுபடலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் தயக்கத்தோடு நடந்து கொள்வீர்கள். வியாபாரத்திலும் அதிரடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. புதிய முதலீடுகள் செய்வதிலும் குழப்பம் இருக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக அடுத்தவர்கள் பஞ்சாயத்திலும், அடுத்தவர்கள் விஷயத்திலும் மௌன விரதம் இருக்க வேண்டும். பெரியவர்களது பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இன்று கவனத்தோடு இருக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் வரக்கூடிய வாய்ப்புகளை இன்று நீங்கள் தவற விடக்கூடாது. முடியாத காரியத்தையும் முடித்து காட்ட தெம்பும் தைரியத்தையும் உங்களுக்குள் வர வைத்துக் கொள்ளுங்கள். இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கிறது. வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரத்தை பொருத்தவரை, முன்னேற்றத்தோடு காணப்படும். புதிய முதலீடுகளை செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழ்வீர்கள். எந்த இடத்திலும் சோர்ந்து போக மாட்டீர்கள். மனம் தளர மாட்டீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் அதை கடந்து செல்லக்கூடிய, தீர்வை தேடி கண்டுபிடிப்பீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள். புது நண்பர்களின் அறிமுகத்தால் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வேலைகள் எல்லாம் அந்தந்த நேரத்திற்கு சரியாக நடக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பொறுமையாக சில முடிவுகளை எடுக்க வேண்டும். வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, பார்ட்னர்களாக இருந்தாலும் சரி, அல்லது கடன் கொடுத்தவர்கள் ஆக இருந்தாலும் சரி, அவர்களோடு அளவோடு பழக வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் படு சுறுசுறுப்பு இருக்கும். குறித்த நேரத்திற்குள் கடமைகளை முடித்து, குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள். சுப செலவுகள் உண்டு. அஜீரண கோளாறால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும்.