Thursday, 10 April 2025

இன்றைய ராசிபலன் - 10.04.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் அமைதி இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் விடுபடும் நாளாக இருக்கும். உங்களுடைய சந்தேக கண்ணோட்டம் தவறாக இருந்திருக்கும். கெட்டது என்று நினைத்த அனைத்தும், நல்லதாக வந்து சேரும். மனதை அலைபாய விடாதீர்கள். யார் மீதும் உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். அமைதியாக இருந்தால் நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நீண்ட நாள் வசூல் ஆகாத கடனை வசூல் செய்து சாதனை படைப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். பிரச்சனைகளிலிருந்து வெளிவரும் நாள். இரவு நல்ல தூக்கத்தை பெறும் நாள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். எந்த ஒரு முடிவையும் சரியாக எடுக்க முடியாது. புது முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். இறைவழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று உருப்படியாக எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து யோசித்து, சிந்தித்து செயல்படுவீர்கள். ஆனாலும் வழக்கம் போல தான் கொஞ்சம் சோம்பேறித்தனம், கொஞ்சம் தூக்கம், உங்களுடைய வேலையை கெடுக்கும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். கடைசி நிமிஷத்தில் மொத்த வேலையையும் செய்ய முடியாது. கவனம் இருக்கட்டும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அசதி இருக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் உடல் உபாதைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். சீக்கிரம் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள் நல்லது நடக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கும். அடுத்தவர்களை பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு, உங்களுக்காக கொஞ்சம் யோசித்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களை பார்த்து கொண்டு இருந்தால் நம்முடைய வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்பதை உங்களுக்கு இன்று நன்றாக புரியும். அனுபவரீதியான பாடங்கள் கிடைக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள், நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. மன குழப்பங்கள் தீரும். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும் நிம்மதி பிறக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தை முன்னேற்ற அயராது உழைப்பீர்கள். உழைப்பில் வெற்றியும் கிடைக்கும். கைநிறைய லாபமும் கிடைக்கும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களையும் நீங்கள் நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். இறை ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்குச் செல்ல நல்ல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய அறிவுரையை கண்மூடித்தனமாக கேட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களுக்கு எது நல்லது கெட்டது என்பதை நீங்கள் தான் இன்று அலசி ஆராய வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் இருக்கும். தேவையற்ற அலைச்சல் இருக்கும். எதிரிகளோடு சண்டை போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இதையெல்லாம் சமாளிப்பதற்குள் தலைவலியும் வந்துவிடும். இன்று கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். அடுத்தவர்களுடைய பிரச்சனையில் மூக்கை நுழைக்காமல் இருப்பது கொஞ்சம் நல்லது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை கொள்வீர்கள். வாங்கிய கடனை திருப்பி அடைப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகள் மனைவி இவர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகள் சொன்ன வேலையை தட்டாமல் செய்து முடிப்பீர்கள். வேலையில் முன்னேற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம், உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். புதிய பார்ட்னர் ஒப்பந்தங்களில் இன்று கையொப்பம் இடலாம். நல்லதே நடக்கும்.
SHARE