மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்க கூடிய நாள். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள். உங்களுக்கு யோகக்காரர் என்ற பெயரும் வரப்போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வரன் அமைய இன்று நிறையவே வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு ஏதேனும் காதல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால் வீட்டில் அதை இன்று வெளிப்படுத்தலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் முழு கவனத்தோடு, ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தலைகுனிவு உண்டாகும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. இறைவனின் மீது முழு நம்பிக்கையை வையுங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று துணிச்சலோடு செயல்படுவீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். யாரைக் கண்டும் உங்களுடைய கால்கள் பின்வாங்காது. எதிரிகளை விரட்டி வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். ஏதாவது பஞ்சாயத்து இருந்தால் இன்று வைத்துக் கொள்ளுங்கள். தைரியமும் பேச்சும் சரமாரியாக வெளிப்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்கணும். நல்ல பெயர் வாங்கணும். வியாபாரத்தில் நிறைய லாபத்தை மீட்டெடுக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுடைய மூளை பெரிய அளவில் சிந்தனை செய்யும். கவலைப்படாதீங்க நல்லதும் நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த அளவிற்கு நல்லது நடக்கவில்லை என்றாலும், அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டிய விஷயங்கள் அந்தந்த நேரத்திற்கு நடக்கும். நீங்கள் உங்களுடைய எதிர்பார்ப்பை தான் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைவனின் மீது பழி போடக்கூடாது. கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் எல்லாம் தானாக நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எடுத்த முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். புது வேலை தேடுவது, புது வியாபாரத்தை தொடங்குவது, இது போன்ற முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். புதுசாக யாரிடமும் கடன் மட்டும் வாங்கிறாதீங்க. செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். மேலதிகாரிகளோடு நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனை செய்து வந்த எதிரி உங்களை விட்டு விலகி விடுவார்கள். மன நிம்மதி இருக்கும். கடன் சுமை குறையும். நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று தேடல் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் என்ன செய்தால் முன்னேறலாம் என்று அலசி ஆராய்ந்து ஒரு முடிவையும் எடுப்பீர்கள். மனது அலை பாய்ந்து கொண்டே இருக்கும். நிலையாக நிற்காது. பொறுமை காத்தால் இன்று நிச்சயம் நல்லது நடக்கும். தேடல் இருக்க வேண்டும். அதற்காக ஒரே நாளில், ஒபாமா ஆக முடியாது என்பதை நீங்கள் இன்று மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
தனுசு
ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நினைத்த இடத்திற்கு இடமாற்றமும், பிரமோஷனோடு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலைச்சல் தேவை இல்லை. வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையை துவங்கினாலும் அதற்கு தடை சொல்வதற்கு 4 பேர் வரிசை கட்டி நிற்பார்கள். நம்மை கை தூக்கி விட ஒரு ஆள் கூட இருக்க மாட்டார்கள். போராட்டமான வாழ்க்கையில் போராடி தான் வாழ்ந்தாக வேண்டும் என்று, ஒரு முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். அடுத்தவர்கள் பேச்சுக்களுக்கு செவி சாய்க்க வேண்டாம். முயற்சிகளை கைவிட வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். பொறுமையாக இருப்பீர்கள். சண்டை போட்டதெல்லாம் போதும். இனிமேல் சாந்தமாக இருக்கலாம் என்று முடிவு செய்து விடுவீர்கள். எதிரிகளை மன்னித்து, விட்டு கொடுத்து விடுவீர்கள். சண்டை போடாமல் சாந்தமாக செல்வதில் இருக்கும் அமைதியை, உணருவீர்கள். விட்டுக் கொடுப்பதில் இத்தனை சுகமா என்ஜாய் பண்ணுவீங்க இந்த நாளை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனை இன்று ஒரு முடிவுக்கு வரும். வாரா கடன் வசூல் ஆகும். தேவையற்ற பிரச்சனைகள் விலகும். மன நிம்மதி கொள்வீர்கள். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நல்லதே நடக்கும்.