மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் பொறுமை தேவை. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சு திறமை வெளிப்படும் நாளாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் இரண்டே நிமிடத்தில் சுலபமாக பேசி சரி செய்து விடுவீர்கள். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பட்டிமன்ற பேச்சாளர்களுக்கு, இன்று சிறப்பு வாய்ந்த அங்கீகாரங்களும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். உற்சாகத்தோடு உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக நடக்கும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலையில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை கொஞ்சம் பொறுமை தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அகல கால் வைக்க கூடாது. நிதானம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன சஞ்சலம் இருக்கும்.முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் சந்தேகம் இருக்கக் கூடாது. முழுமையாக நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் வெற்றி கிடைக்கும். அரைகுறை மனதோடு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் தோல்வியை அடையும். பார்த்துக்கோங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். மூன்றாவது மனிதர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. எதுவாக இருந்தாலும் வாழ்க்கை துணையோடு ஒரு முறை ஆலோசனை செய்வது நல்லது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் பொய் சொல்லி தப்பிக்க பார்க்க வேண்டாம். உண்மையை சொல்லி பிரச்சனை வந்தால் இன்றே சரியாகிவிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுப செய்திகள் வரக்கூடிய நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களின் மூலம் கொஞ்சம் அலைச்சிக்ஷல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களோடு இன்று யாராலும் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது. எல்லா வேலையிலும் படு சுறுசுறுப்பு இருக்கும். எதிரிகளை எதிர்த்துப் போராடி வீழ்த்தி துவம்சம் செய்து விடுவீர்கள். உங்களைப் பார்த்தாலே நாலு பேர் பயந்து ஒதுங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு இன்றைய நாள் அதிரடியாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. எப்பாடு பட்டு போராடியாவது மனதிற்கு பிடித்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே இன்று சோம்பேறித்தனமாக இருக்க வேண்டாம். உங்களுடைய வேலைகளை எல்லாம் முன்கூட்டியே செய்து முடித்து விடுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றால் இந்த நாள் இறுதியில் பிரச்சனைகள் உண்டாகும் ஜாக்கிரதை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே அடுத்தவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்து, நீங்கள் செய்யும் நல்ல காரியங்கள் கூட இன்று கொஞ்சம் குழப்பத்தில் போய் முடியும். ஆகவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். நல்லதுக்காக கூட மூன்றாவது நபருடைய பிரச்சனையில் இன்று தலையிட வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமையான, தாமதம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. கொஞ்சம் பின்னடைவு ஏற்படும். உடல் அசதி ஏற்படும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று மனது சொல்லும். ஆனால் வேலை வரிசை கட்டி நிற்கும். சமாளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு தான்.