மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும் போது கொஞ்சம் பேராசை ஏற்படும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படாதீங்க. இன்று மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அது மட்டும் இல்லாமல் வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. செலவை கட்டாயம் குறைக்கணும் இல்லையென்றால் எதிர்காலத்திற்கு பிரச்சனை.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் சுறுசுறுப்பாக நடந்து முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். நல்லது நடக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன தோல்விகள் வந்தாலும் துவண்டு போகக்கூடாது. தோல்விகளைத் தாண்டி முயற்சிகளை கைவிடக்கூடாது. வேலையில் சுறுசுறுப்பு தேவை. நிறைய தண்ணீர் குடிக்கவும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட நிதிநிலைமை உயரும். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு உயரும். பிரச்சனைகள் விலகும் நாள். சந்தோஷம் கிடைக்கும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்ய கடன் தொகை கிடைக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை கொஞ்சம் சுப செலவை ஏற்படுத்தும். நீண்ட தூர பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும் ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற்றம் தரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு தானாக தேடி வரும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்கவும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. முன்கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் பதட்டம் கொஞ்சம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உறவுகளோடு கவனமாக பேசுங்கள். டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். அவசர முடிவு வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் பிரச்சனைகள் வரும். வீண் விரைய செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். பாராட்டுகள் கிடைக்கும் நாள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியங்கள் கூட இன்று நடந்து முடியும். எதிர்கால சேமிப்புக்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரம் விரிவடையும். நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். தொலைபேசியின் மூலம் வரும் செய்தி மணமகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். லாபம் அதிகரிக்கும். வேலையை பொறுத்தவரை அனுசரணை தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். இன்று நாவடக்கம் மிக மிக முக்கியம். மேலதிகாரிகளாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி, தலைகனத்தோடு யாரிடமும் நடந்து கொள்ளாதீர்கள். பிரச்சனை அடுத்தவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் வரும் என்பதை உணர வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற டென்ஷன்கள் குறையும். கடமைகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டீர்கள். உங்களுடைய வேலைகளை குறித்த நேரத்திற்கு சரியாக முடித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடவும். உடலுக்கு சூடு தரும் உணவை தவிர்ப்பது நல்லது.
Monday, 7 April 2025
