Sunday, 6 April 2025

இன்றைய ராசிபலன் - 06.04.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். ராமபிரானை நினைத்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நிதி நிலைமை உயரும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். ராமர் கோவிலுக்கு கொஞ்சம் துளசி இலைகளை வாங்கி கொடுங்கள். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். சென்ற இடமெல்லாம் செல்வாக்கு உயரும். தலைகுனிந்த இடத்தில் உங்களுடைய திறமையை வெளிக்காட்டி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். சுப செலவுகள் ஏற்படும் நாள்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் தானாக தேடி வரும். ராமரின் அருளால் மன நிம்மதி அடைவீர்கள் வெற்றி வாகை சூடுவீர்கள். அனுமன் கோவிலுக்கு இன்று வெண்ணெய் வாங்கி கொடுங்கள். உங்களுக்கு தீராத துன்பங்கள் தீரும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். ராமரின் அருளால் இன்று நல்ல செய்தி வந்து சேரும். நிதிநிலைமை சீர்படும். வராத பணம் கையை வந்து சேரும். மன நிம்மதியை அடைவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். உடல் உபாதைகள் நீங்கும். மன நிம்மதி பிறக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையும் நாளாக இருக்கும். நீண்ட நாள் துன்பங்கள் விலகும். அனுமனின் அருளால் இன்று இறை வழிபாட்டை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். அனுமனின் பெயரைச் சொல்லி இரண்டு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுங்கள். வராத பணம் கூட உங்கள் கையை வந்து சேரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். இன்று மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று ராமநவமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நல்லது நடக்கும்.

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. காலையிலேயே ராமபிரானை நமஸ்காரம் செய்துவிட்டு புது முயற்சிகளை மேற்கொண்டால், தடைகள் தடங்கல்கள் வராது. கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வருமானத்தை ஈட்டுவதில் குறிக்கோளாக இருப்பீர்கள். செலவுகளை குறைப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு அதிகரிப்பீர்கள். ராமரின் அருளால் இன்று உங்கள் குடும்பத்திற்கு நல்லதே நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ராமரின் அருளால் துன்பங்கள் தானாக விலகிவிடும். பிரச்சனைகளை எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலை வந்தாலும், பிரச்சனைகளின் மூலம் பாதிப்பு வராது. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.

மகரம்


மகர ராசி காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். ராமன் நாமம், ராமம் மந்திரம், ராமர் கதைகள் உங்கள் மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்றைய தினம் முழுவதும் இறைவழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் தானாக விலகி விடும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கலான பிரச்சனைக்கு கூட தீர்வு கிடைக்கும். என்ன செய்வது என்று புரியாமல் அலைமோதிக் கொண்டிருந்தவர்கள் ராமர் பாதத்தை பற்றி கொள்ளுங்கள். உங்களுடைய கவலைகளை அவர் தீர்த்து வைப்பார். உங்களால் முடிந்தவரை இரண்டு ஏழை குழந்தைகளுக்கு இன்று படிப்புக்கு உதவி செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த, அமைதி நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். உங்களுடைய கடமைகளை இன்று சரியாக நிறைவேற்றி விடுவீர்கள். கையில் இருக்கும் பணம் சீராக செலவாகும். தேவைக்கு ஏற்ப கையில் பணம் இருக்கும் நல்லதே நடக்கும்.
SHARE