மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன சஞ்சலங்களில் இருந்து விடுபடக் கூடிய நாளாக இருக்கும். தீராத மனக்குழப்பம் தீரும். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தியதற்கு ரொம்பவும் வருத்தப்படுவீர்கள். தெரியாமல் நீங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்வீர்கள். அவசரம் வேண்டாம். நிதானத்தோடு செயல்பட்டால் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். சந்தேக கண்ணோட்டத்தை விட்டு விடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றி அடையும் நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக பேச்சுத் திறமையால் நீங்கள் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரத்தை முன்னோக்கி நடத்திச் செல்வீர்கள். நிதிநிலைமை மேலோங்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான சாந்தமான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் நேரத்திற்கு சரியாக முடித்து விடுவீர்கள். சிக்கனமாக செயல்படுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பையும் உயர்த்துவீர்கள். இன்று நீங்கள் துவங்கும் சேமிப்பு எதிர்காலத்தில் நல்ல பலனை கொடுக்கும். சீட்டு கட்டுவது, வங்கியில் கணக்கு துவங்குவது, இதுபோல முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யார் உங்களைப் பற்றி என்ன பேசினாலும் சரி, அமைதியாக இருங்கள். உங்களுக்கு நடக்கும் நல்லதை அனாவசியமாக வெளி ஆட்களோடு பகிர்ந்து கொள்ளாதீர்கள். கண் திருஷ்டி விழும் வாய்ப்புகள் இருக்கிறது. அமைதியாக இருக்கும் பட்சத்தில் எதிரிகளால் தொந்தரவு இருக்காது. யாரையும் எதிர்த்து போராட வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து வந்த பிரச்சனைகள் விளங்கும். வியாபாரத்தை பொருத்தவரை போட்டியாக இருந்தவர்கள், நண்பர்களாக மாறுவார்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நன்மையை செய்யும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். வயது முதிர்ந்தவர்கள் வெயிலில் வெளியே செல்ல வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமைய, மனதிற்கு பிடித்த வேலை, வியாபாரம் செய்ய, நிறைய வாய்ப்புகள் உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மன நிம்மதி அடைப்வீர்கள். எதிர்பாராத பண வரவு சந்தோஷத்தை கொடுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சிரித்து சிரித்து வயிறு வலிக்கப் போகிறது. மகிழ்ச்சி வெளிப்படும் நாள். மனதிற்கு பிடித்த சம்பவங்கள் நடக்கும் நாள். உற்சாகம் இருக்கும் நாள். இந்த நாளுக்கு இறைவனுக்கு கட்டாயம் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். துக்கத்தை எல்லாம் மறந்து, சில பேர் சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தோடு அதிகம் நேரம் செலவு செய்வீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கபூர்வமாக அறிவுபூர்வமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய சிந்தனை வேளையிலும் வியாபாரத்திலும் மேலோங்கும். நீங்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் படி அமையும். உற்சாகம் உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சந்தோஷம் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய வேலையில் எப்படி முன்னேறுவது என்று நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள், வெற்றியை கொடுக்கும். மேலதிகாரிகளே வியப்படைவார்கள். அந்த அளவுக்கு இன்று திறமையாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வானளவு வெற்றியைத் தொடும். அடுத்தவர்கள் அண்ணாந்து பார்க்கும் உயரத்திற்கு நீங்கள் செல்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். வேலைகளை தள்ளி வைக்க கூடாது. சோம்பேறித்தனம் படக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், முன்கூட்டியே தயாராகி விடுங்கள். தாமதத்தால் உங்களுக்கு பிரச்சனைகள் வர இன்று வாய்ப்புகள் உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள், சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடனே துவண்டு போகக்கூடாது. பிரச்சனைகளையும் தோல்விகளையும் சவாலாக ஏற்றுக் கொண்டு எதிர்த்துப் போராடினால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எல்லா விஷயத்திலும் சாதித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்ற தலைக்கனத்தில் நடந்து கொள்ளக் கூடாது. கவனம் தேவை. பொய் சொல்லக்கூடாது, அடுத்தவர்களை ஏமாற்றக்கூடாது, நேர்மையாக நடந்து கொண்டால் நன்மை உண்டு. சந்தோஷத்தில் தலைகனம் உயரும் போது, கடவுள் பாடத்தை கற்றுக் கொடுப்பான். ஜாக்கிரதை, இன்று நாவடக்கம் தன்னடக்கம் கட்டாயம் தேவை.