மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் உங்களை தவிக்க வைத்திருந்த பணம், உங்கள் கையை வந்து சேரும். பொன் பொருள் சேர்க்க இருக்கிறது. கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இக்கட்டான கடன் சுமையிலிருந்து வெளிவந்து பெருமூச்சு விடக் கூடி கூடிய வாய்ப்புகள் தேடி வரும். கடன் பணம் சம்பந்தப்பட்ட வில்லங்கமான பிரச்சனைகளை சரி செய்ய இன்று முயற்சி செய்யலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகள் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடுவது, புது வியாபாரம் துவங்குவது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது, இதுபோல மங்களக் காரியங்களை செய்யலாம். நன்மையே நடக்கும். மற்றபடி வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்கள் கையை வந்து சேரும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக இருக்கும். உடல் அசதி இருக்கும். சுறுசுறுப்பாக எல்லா வேலையும் செய்ய முடியாது. இதனால் சின்ன பின்னடைவுகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. கவலை வேண்டாம். எல்லா நாளும் முன்னேற்றத்தோடு செயல்பட முடியும் என்பது இல்லை. சில ஏற்ற இறக்கங்கள் வரத்தான் செய்யும். இந்த நாளை அனுசரித்து செல்லுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். விடை தெரியாத பிரச்சனைகளுக்கு நீங்களே ஒரு முடிவை கற்பனை செய்து, குழப்பிக் கொள்ள வேண்டாம். மனதில் உள்ள விஷயத்தை வெளிப்படையாக பேசினால் குழப்பம் தீரும். வேலை நடக்கும். மன நிம்மதி உண்டாகும். மனதை தெளிவாக்க இறை வழிபாடு மட்டுமே உங்களுக்கு வழிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் நிறைந்த நாளாக இருக்கும். துணிச்சலோடு எல்லா வேலையும் செய்வீர்கள். எதிரிகளை எதிர்த்துப் போராடுவீர்கள். உண்மையை எல்லோருக்கும் உறைக்கும்படி சொல்லுவீர்கள். இதனால் புதிய எதிர்ப்புகள், எதிரிகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் நேர்மையை இரண்டு கண்களாக பாவித்து இன்றைய நாளில் நீங்கள் செயல்படுவீர்கள். சவால்களை எதிர்கொள்ளும் நாள் இன்று.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வரும். உங்களை சுற்றி இருப்பவர்களை திட்டிக் கொண்டே இந்த நாளை நகர்த்தி செல்ல போகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்சனை. உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பிரச்சனை. கொஞ்சம் நிதானத்தை கையாள வேண்டும். குறிப்பாக மேலதிகாரிகள் இன்று பொறுமையை இழந்தால் பிரச்சனை உங்களுக்கு தான் ஜாக்கிரதை.
- Advertisement -
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு, புது அனுபவங்களை கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான அறிவுரையையும் கொடுக்கும். இத்தனை நாள் வாழ்க்கையில் செய்த தவறை எண்ணி நீங்களே வருத்தப்பட்டுக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய பல நல்ல விஷயங்கள் இன்று நடக்கும்.
விருச்சிகம்
விருச்சக ராசி காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்கும். கடன் சுமை குறையும். பண வரவு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விளக்கும். வாழ்க்கை துணைக்கு மனதிற்கு பிடித்த பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலம் தரும் நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதி இருக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டோடு நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்கள் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள அயராது உழைப்பீர்கள். நல்லதே நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எது தவறு, எது சரி என்பதை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில் நிதானம் தேவை. வியாபாரத்தை பொருத்தவரை பாட்னரோடு வாடிக்கையாளரோடு பொறுமையாக பேச வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன இழப்புகள் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு இருக்கும். நல்ல தூக்கம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பிரஷர் இருந்தாலும், அதை நீங்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொள்ள மாட்டீர்கள். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, குடும்பத்திற்கும் தூக்கத்திற்கும் இடம் கொடுக்கப் போகிறீர்கள். என்ஜாய் பண்ணுங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். உங்களை கை தூக்கி விட நாலு பேர் இருப்பார்கள். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகக் கூடாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேர்மையாக நடந்து கொண்டால், உங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் வராது. நல்லது நடக்கும். பொறுமை தேவை வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடக்கவும்.