Tuesday, 1 April 2025

இன்றைய ராசிபலன் - 01.04.2025..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுதந்திரமான நாளாக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலையை செய்வீர்கள். மனதிற்கு பிடிக்காத வேலையை செய்வதை தவிர்த்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாளாக இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வியாபாரத்திலும் வேலையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சங்கடங்கள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற நட்பை விட்டு விலகி இருப்பது நல்லது. அனாவசியமாக முன்கோபட வேண்டாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தை பொருத்தவரை மந்தமான சூழ்நிலை நிலவும்.



மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கூட கூடிய நாளாக இருக்கும். செய்யும் வேலையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் தடையாக இருந்த விஷயங்களை எல்லாம், படிக்கற்களாக மாற்றுவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். பொறுமையை கையாளுங்கள். இறைவனின் மீது நம்பிக்கையை வையுங்கள். குறித்த நேரத்திற்கு முன்பாக குறித்த வேலைகளை முடித்து விட்டால் பிரச்சினை கிடையாது. நேரத்தை வீணடிக்க வேண்டாம்.



சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வரும். தேவையற்ற டென்ஷன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள். நன்மை நடக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து பேசினால் நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் புதிய முடிவுகள் எடுக்கலாம். வேலையில் கொஞ்சம் அனுசரணை தேவை. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசி காரர்கள் இன்று கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும்‌. அடுத்தவர்களை பற்றி கவலைப்படக்கூடாது. அடுத்தவர்களை பற்றி புறம் பேசக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதற்காக வாயை திறந்தால் கூட இன்று பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை மீண்டும் சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வேலையில் மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சண்டை சச்சரவுகள் பகை உணர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் அனுசரணை தேவை. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு காணப்படும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். எதிரிகளால் தொல்லை வரும். வியாபாரத்தில் கவனம் தேவை. போட்டி பொறாமைகளின் மூலம் சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ப்ரமோஷன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாள் மனதில் வைத்திருந்த விஷயத்தை வெளிப்படையாக பேசுங்கள். நல்ல முடிவு கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். தேவையான ஓய்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க கூடிய நாளாகவும் இருக்கும். நிதி நிலைமை சீர்படும். கடன் தொல்லையிலிருந்து வெளிவருவீர்கள்.
SHARE