O/L பரீட்சையில் தமிழ்மொழி பரீட்சைக்கு தோற்றிய 88 வயது சிங்கள பாட்டி..!!!
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 88 வயது சிங்கள பாட்டி தமிழ் பரீட்சை எழுதியுள்ளமை பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பாட்டி க.பொ.த சாதாரணதர இரண்டாம் மொழி தமிழ் பரீட்சை தோற்றியுள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.