ஊழியர் சேமலாப நிதியத்தை(EPF) உரிய வகையில் வழங்காத 22,450 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவிக்கின்றது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.